தூத்துக்குடியில் ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி ஆரம்பம்!!

தூத்துக்குடியில் ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி ஆரம்பம்!!

தூத்துக்குடியில் லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் 2025-26 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி வெள்ளிகிழமை  நடைபெற்றது.

தூத்துக்குடியில் ShellNXplorers, மத்திய அரசின் நிதிஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷனுடன் இணைந்து லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் நடத்திய ஷெல் நெக்ஸ்ப்ளோர்ஸ் பயிற்சியில் 20 அடல் டிங்கரிங் லேப் பள்ளிகளை சேர்ந்த 31 ஆசிரியர்கள் பங்குபெற்றனர். இந்த பயிற்சியானது , கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பிராப்ளம் சால்விங் ஸ்கில் மற்றும் கிரிட்டிக்கல் திங்கிங் ஐ மேம்படுத்த நடைபெறுகிறது. 

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பின்பு ஆசிரியர்கள் அதை மாணவர்களுக்கு கற்பித்து அதன் மூலம் சிறந்த அறிவியல் முன்மாதிரிகளை உருவாக்குவார்கள் .

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டிற்கான முதல் பயிற்சியானது , சத்யா பார்க்ஸ் அண்ட் ரீஷார்ட்ஸில் வெள்ளிகிழமை அன்று நடைபெற்றது. இதில் 31 ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஷெல் நெக்ஸ்ப்ளோர்ஸ் பயிற்சி பெற்றனர் .

இதில் சிறப்பு விருந்தினராக திரு.சத்யசீலன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பள்ளி கல்வி துறை NSNOP அவர்கள் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் நோக்கம் மற்றும் பள்ளியின் பங்கு குறித்து பேசினார் . மேலும் அவர் இதை ஏற்பாடு செய்த லேர்னிங் லிங்க்ஸ் பௌண்டேஷன் மற்றும் ஷெல் நெக்ஸ்ப்ளோர்ஸ் குழுமத்திற்கு நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை லேர்னிங் லிங்க் பவுன்டேசன் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.