கவர்னகிரியில் ஏப்ரல் 16ம் தேதி வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா - ஆட்சியர் தகவல்!

கவர்னகிரியில் வருகிற 16ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 253வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

கவர்னகிரியில் ஏப்ரல் 16ம் தேதி வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா - ஆட்சியர் தகவல்!

கவர்னகிரியில் வருகிற 16ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 253வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது 253வது பிறந்த நாள் விழா 16.04.2023 அன்று நடைபெறுகிறது.

 தமிழ்நாடு முதலமைச்சர்  சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமையை போற்றும் வகையில், அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் அமைத்தல், தலைவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடுதல், தியாகிகளின் வாரிசுதார்களை கௌரவித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர்களின் தியாகங்களை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் மேற்கொண்டு வருகிறார்கள். 

அந்த வகையில், உழுது பயிர் செய்து உலகுக்கு உணவளிக்கும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரமும் தியாக மரணம் எய்தியவர்தான் வீரன் சுந்தரலிங்கம்.  நன்றிக்காக நாட்டிற்காக மன்னவனுக்காக சுதந்திரத்திற்காக வெடிமருந்து கிடங்கில் எரியும் தீயுடன் வீழ்ந்து உடல் வெந்து சாம்பல் ஆன தியாகியே வீரன் சுந்தரலிங்கம். அன்னாரது பிறந்த தினம் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் விழாவில்  மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா  முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் வழித்தோன்றல்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தவுள்ளார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.